பக்கங்கள்

புதன், 14 செப்டம்பர், 2011

எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளுகின்ற கட்டமைப்பு எமக்குத் தேவை – பிளேக்கிடம் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள்!


முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த ஆயுதப் போராட்டம் போல் எமது போராட்டங்கள் முடியவில்லை. இவ்வாறு தெற்காசிய வெளி விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் தூதுவரிடம் யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் தூதுவர் குழு இணையங்களின் பிரதிநிதிகளை நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் கோவில் வீதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார்கள் . இச்சந்திப்பில் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்,  நாங்கள் எமது மண்ணில் இருந்தும் கூட எதுவும் செய்யமுடியாதுள்ளது. பேச்சுச் சுதந்திரம் கூட மறுக்கப்பட்டுள்ளது. எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளுகின்ற கட்டமைப்பு, மொழியுரிமை, கலாச்சாரம் போன்றவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமைகள் எமக்குத் தேவை.
கிறிஸ் பூதம் என்ற உருவாக்கம் மக்களை அச்ச நிலைமைக்குள் கொண்டு சென்று, அரசு இதன் மூலம் உளவியல் யுத்தத்தை நடாத்துகின்றது. எமது நிலங்கள் பறிக்கப்படுகின்றது. மீள் குடியேற்றம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கு தொழிற்சாலைகள் இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வைக் காண அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
இதேவேளை நேற்று முன்தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் சம்பந்தனும் சுமந்திரனையும் பிளேக்கை சந்தித்திருந்தனர். சந்தித்தபின்னர் கருந்து வெளியிட்ட சம்பந்தனும் சுமந்திரனும் சந்திப்பு திருத்திகரமாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். எவ்வாறான விடயங்களில் திருத்தி கண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக