பக்கங்கள்

வியாழன், 15 செப்டம்பர், 2011

இலங்கையில் 10வீதமானவர்களுக்கு மனநோய்

  
இலங்கையில் மனநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி தேசிய மன ஆரோக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வசிக்கும் மக்களில் 10வீதமானவர்களுக்கு மனநோய் இருப்பதாகவும், இரண்டு வீதமானவர்களுக்கு அதிதீவிர மனநோய் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சுனாமி பாதிப்பினால் அதிகமானவர்கள் மன அழுத்தத்திற்கும் மனநோய்க்கும் உள்ளாகியிருப்பதாகவும் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களே இதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய மன ஆரோக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளியில் சாதாரணமாக நடமாடினாலும் பலர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சிகிச்சையும் ஆலோசனையும் பெறுவதன் மூலம் நோயை குணப்படுத்த முடியும் என்றும் தேசிய மன ஆரோக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் சிகிச்சையின் மூலம் குணமடையலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நோய்க்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண்பதற்காக உளவியல் ஆதரவுக்கான தேசிய சபை மற்றும் சுமித்ராயோ போன்றவற்றை நாட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக