பக்கங்கள்

புதன், 14 செப்டம்பர், 2011

சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை – பிரித்தானிய தமிழர்கள் வாக்களிக்கலாம்


சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும், இணையவழி மனுவொன்றை பிரித்தானிய அரசுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பிரித்தானிய மக்கள் ஒரு கோரிக்கை ஒன்றை முன்வைத்தால் அது தொடர்பாக பிரித்தானியா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்பது அந்த நாட்டில் கடைப்பிடிக்கப்படும் ஒரு நடைமுறையாகும். 

இதன் அடிப்படையிலேயே சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் மனுவொன்றை பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் இணையம் மூலம் கையளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

உலகத் தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்க, அனைத்துலக நிபுணர்கள் பலர் அங்கம் வகிக்கும் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. 

பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்கள் இந்த மனுவில் ஒப்பமிட இதனைச் சொடுக்கவும்- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக