அவுஸ்திரேலிய மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ரோபோக்கள் உணவு பரிமாற உள்ளன.
அவுஸ்திரேலியாவில் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக கடந்த 2008ம் ஆண்டு கார்லிங் கமிஷன் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதை தொடர்ந்து நோயாளிகளுக்கு தேவையான சத்தான உணவு வகைகளை வழங்க மருத்துவமனை நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.
அதை தொடர்ந்து சிட்னியில் உள்ள ராயல் நார்த் ஷோர் என்ற ஒரு தனியார் மருத்துவமனை சத்தான உணவுகளை எந்திர மனிதன் என்றழைக்கப்படும் ரோபோக்கள் மூலம் வழங்க முடிவு செய்துள்ளது.
அதற்கான ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் கணணி மயமாக்கப்பட்டு அதில் அவற்றின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இந்த ரோபோக்கள் கணணி டிராலியின் மூலம் மருத்துவமனை முழுவதும் வலம் வரும். நோயாளிகளுக்கு தேவையான உணவு வகைகள், ஆடைகள் மற்ற பொருட்களை வழங்கும். இவை நடமாடும் வழித்தடங்களும் கணணியில் பதிவு செய்யப்படும். அதன்படி அவை செயல்படும்.
நோயாளிகளுக்கு ரோபோக்கள் உணவு வழங்கும் செயல்பாடு அடுத்த ஆண்டு இறுதியில் நடைமுறைக்கு வரும் என ராயல் நார்த் ஷோர் மருத்துவமனை அறிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக