பக்கங்கள்

வியாழன், 15 செப்டம்பர், 2011

சிறுவர்களை தற்கொலை தாக்குதல்தாரிகளாக மாற்றுபவர்களுக்கு எதிராக உலகம் அணிதிரள வேண்டும்


சிறுவர்களை ஆயுதப்படைகளில் சேர்த்து அவர்களை தற்கொலை போராளிகளாக மாற்றுபவர்களுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்தகைய அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு எதிராக சர்வதேச நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான ஐ.நா.செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பேசும் போது தெரிவித்தார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் அழைப்பு சிறுவர்களை கடத்திச்சென்று படையில் சேர்த்ததாகவும், இதனால் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள் என குறிப்பிட்ட அவர் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று அரசாங்க படைகளுடன் சேர்ந்தியங்கிய  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் சிறுவர்களை கடத்திச்சென்று படைக்கு சேர்த்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
நாடுகள் ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி சிறுவர்களை கைது செய்து தடுப்புக்காவலில் வைப்பது அதிகரித்து வருகின்றது. மோதல்களில் ஈடுபட்டார்கள் அல்லது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அதற்குக்காரணம் கூறப்படுகின்றது. இது கவலை தருகின்றது. அவர்களுடைய சுதந்திரத்தை பறிக்கும்போது அது மனித உரிமை மீறல்கள் ஆகும் என அவர் தெரிவித்தார். தேசிய மற்றும் இராணுவ நீதிமன்றங்களில் சிறுவர்கள் மீது குற்றஞ்சாட்டும்போது
அவர்களுக்கு சட்ட உதவி ஏற்பாடு செய்து கொடுக்கப்படுவது கிடையாது. பெற்றார்கள் சிறுவர்களுடன் வருவது கிடையாது. அச்சிறுவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டு பற்றிய விவரம் எதுவும் தெரியாத நிலையில் உள்ளனர்.
ஆயுதக்குழுக்களுடன் அவர்கள் பலவந்தமாக சேர்க்கப்பட்டார்கள் என்ற அடிப்படைக்காரணங்களை பார்க்கும் போதும் அவர்களின் வயது குறித்தும் கவனம் எடுக்க வேண்டும். ஆதலால் அச்சிறுவர்களை பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்க்க வேண்டுமே
தவிர குற்றம் புரிந்தவர்களாகக் கருதக்கூடாது. அச்சிறுவர்களை பலவந்தமாக திரட்டுபவர்கள் மீது குற்றஞ்சாட்டவேண்டும். ஆயுதக்குழுக்களுடன் அச்சிறுவர்கள் இருக்கும்போது அவர்கள் தங்களுடைய தளபதிகளால் அடித்து துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றார்கள்.
விமானத்தாக்குதலில் சிவிலியன் மக்களுடன் சிறுவர்கள் கொல்லப்படுகின்றார்கள்.
அது பேரழிவைக் கொண்டு வருகிறது. யுத்தத்தின்போது சிவிலியன்கள் இழப்பை வெகுவாக்ககுறைக்க வேண்டும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றுவதை நிறுத்த வேண்டும். இவை நவீன யுத்தகாலத்தில் தெரிந்தே செய்கின்ற தவறு ஆகும். இவ்வாறான நடவடிக்கைளுக்கு எதிராக உலகம் ஒன்றாக ஐக்கியப்பட்டு செயல்படவேண்டும் என ராதிகா குமாரசாமி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக