வடபகுதியில் தொல்பொருள்கள் இருக்கலாம் என நம்பப்படும் 400 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளபட்ட ஆராய்ச்சிகளின் போது இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளதாக தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க தெரிவித்தார்.
இதுவரை கண்டறியப்படாத பல தொல்பொருட்கள் இந்தப் பிரதேசத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளின் போது இந்த இடங்கள் இனங்காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரதேசங்கள் தொல் பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு சட்ட ரீதியான முறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக